Description
பணத்தினை ஈர்க்கும் சக்தி கொண்ட பச்சை கற்பூரம்…!!
பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மைஇருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம்இல்லாமல் வீட்டில் பணம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். வீண் செலவுகள் இருக்காது.இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில்வைக்கும்போது, அங்கு வரும் எதிர்மறையானவாசங்களையும், சக்திகளையும் இது தடுத்துநிறுத்தும்.
தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான கல்லாப்பெட்டி, பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
பச்சை கற்பூரத்தை எடுத்து குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்து விட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.
வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.
2 பச்சை கற்பூரத் துண்டை, ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது.
Reviews
There are no reviews yet.